தமிழக பெண்களே., 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சேவை இலவசம்., அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
தமிழக பெண்களே., 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சேவை இலவசம்., அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!
அண்மைக்காலமாக இதற்கு மேற்பட்ட பெண்கள் கர்ப்ப வாய் புற்று நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. மேலும் இந்த புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கும் மேலும் பாதிப்பை குறைப்பதற்கும் பல நடவடிக்கைகளை அரசு சார்பில் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதியில் நடந்த நாடாளுமன்ற இடைக்கால கூட்டு தொடரில் பேசிய நிதியமைச்சர் சீதாராமன் கர்ப்ப வாய் புற்றுநோயை கட்டுப்படுத்த 9 முதல் 14 வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் தமிழக அரசு இது குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது பெரும்பாலான பெண்கள் கர்ப்ப வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. மேலும் இந்த புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப கட்டத்தில் முறையான சிகிச்சை அளித்து உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதையொட்டி  30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பவாய் புற்று நோய்க்கான பரிசோதனையை அரசு இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளதாம்.  மேலும் இதற்கான நடைமுறையை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here