தமிழக பள்ளி மாணவர்களே., மாணவிகள் போல உங்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை., அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசு அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் உயர்கல்வி பயிலும் ஏழை எளிய மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற மக்களவை தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அதாவது மாணவிகளின் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்குவது போல், அரசுப்பள்ளியில் இருந்து கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

TNPSC குரூப் 4 தேர்வர்கள்.., தேர்வில் வெற்றி பெற சூப்பரான டிப்ஸ் இதோ., Don’t Miss It !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here