இந்த அரசு பணியாளர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்., அகவிலைப்படி 10 சதவீதம் உயர்வு., ஒப்புதல் வழங்கிய உ.பி.!!!

0
இந்த அரசு பணியாளர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்., அகவிலைப்படி 10 சதவீதம் உயர்வு., ஒப்புதல் வழங்கிய உ.பி.!!!
நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசு ஊழியர்களும், தங்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் சாலைப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த வேண்டும் என பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் 10 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அம்மாநில போக்குவரத்து கழக பிஆர்ஓ அஜித் சிங் தெரிவித்துள்ளார். இதன்மூலம் உத்திரபிரதேசத்தில் சுமார் 12,000 சாலைப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதமாக உயரக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here