தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது தவிர மதுபானக்கடைகளில் இது போன்ற விதி மீறல் செயல்கள் நடப்பதை தடுக்கும் நடவடிக்கையாக மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரைக்கும் மேற்பார்வையாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.