பெண்கள் பள்ளிகளில் ஆண்களை வேலைக்கு அமர்த்தக்கூடாதா? ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

0
பெண்கள் பள்ளிகளில் ஆண்களை வேலைக்கு அமர்த்தக்கூடாதா? ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!
மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரிபவர்கள், பணி காலத்தில் உயிரிழக்க நேரிட்டால், அவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவது வழக்கம். அந்த வகையில் மகாராஷ்டிராவில் ராகுல் மேஷ்ராம் என்பவருக்கு, அரசு உதவி பெறும் அமராவதி கான்வென்ட் பள்ளியில் கருணை பணி நியமனம் வழங்கப்பட்டது. இருப்பினும் பெண்கள் பள்ளியில் ஆண் பியூனை பணியமர்த்த முடியாது என கூறி அப்பள்ளி நிர்வாகம் பணி நியமனத்தை நிராகரித்தது.
இது தொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், “மாநில அரசிடம் இருந்து உதவி பெறும் சிறுபான்மை நிறுவனங்கள், தகுதியுடைய விண்ணப்பதாரரின்  கருணை பணி நியமனத்தை ஏற்க வேண்டும். பெண்கள் பள்ளியில் ஆண்களை பணியமர்த்த கூடாது என்பது பாலின சார்பு அணுகு முறைக்கு எதிரானது.” எனக் கூறிய நீதிபதிகள், அப்பள்ளிக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here