அரசு ஊழியர்கள்;  தனியார் வேலைகள் செய்யக்கூடாது – சி.வி.சி. அட்டகாசமான அறிவிப்பு!!!

0

அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்றவுடனே தனியார் நிறுவன வேலையில் சேரக்கூடாது என்றும், குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்:

ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஓய்வு பெற்ற உடனேயே தனியார் துறை நிறுவனங்களில் வேலைகளில் சேர்ந்து கொண்ட சம்பவங்களைக் குறிப்பிட்டு, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சி.வி.சி), கட்டாயமாக  குறிப்பிட்ட காலத்தை நிறைவு செய்யாமல், இதுபோன்ற வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வது “கடுமையான தவறான நடத்தை” என்று கூறியுள்ளது.

சில சந்தர்ப்பங்களில், அரசாங்க நிறுவனங்களிலிருந்து ஓய்வு பெற்ற உடனேயே, ஓய்வுபெற்ற அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் முழுநேர வேலை / ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்” என்று  அனைத்து மத்திய அரசு துறைகளின் செயலாளர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவில் சி.வி.சி தெரிவித்துள்ளது.

ஆகையால் இதனை தடுக்கும் விதத்தில் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சி.வி.சி) இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அப்படி தனியார் நிறுவனங்களில் பணிக்கு செல்லும் அரசு அதிகாரிகள் அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மீது எந்த வழக்கும் இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் தடையில்லா சான்றிதழ் ஒன்றை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here