ஓய்வூதிய திட்டம்., அரசு ஊழியர்களுக்கு 12 சதவீதம் வரை வருமானம்., வெளியான முக்கிய தகவல்!!!

0
ஓய்வூதிய திட்டம்., அரசு ஊழியர்களுக்கு 12 சதவீதம் வரை வருமானம்., வெளியான முக்கிய தகவல்!!!
ஓய்வூதிய திட்டம்., அரசு ஊழியர்களுக்கு 12 சதவீதம் வரை வருமானம்., வெளியான முக்கிய தகவல்!!!

மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு 2004 ஆம் ஆண்டு முதல் தேசிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பழைய ஓய்வூதிய திட்டம் போல் பணபலன்கள் கிடைப்பதில்லை என பலரும் நீண்ட காலமாக அரசிடம் முறையிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆராய்ந்து சீரமைக்க மத்திய நிதித்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த குழுவில் உறுப்பினராக உள்ள பென்ஷன் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் தீபக் மொஹந்தி முக்கிய அறிவுரையை வெளியிட்டுள்ளார். “தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு முதல் ஆண்டே சுமார் 12 சதவீதம் வரை வருமானம் கிடைத்துள்ளது. இது 10 ஆண்டு பத்திரம் மற்றும் மார்க்கெட் பென்ச்மார்க்கை காட்டிலும் அதிக வருமானம் தான். மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 9.4 சதவீதமும், மாநில அரசு ஊழியர்களுக்கு 9.2 சதவீதமும் வருமானம் பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் தனியார் ஊழியர்களும் முதலீடு செய்து வருகின்றனர். இருந்தாலும் அரசு ஊழியர்களுக்கே அதிக வருமானம் கிடைக்கும் வகையில் செயல்படுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

ரேஷன் அட்டைதாரர்களே., தமிழக ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்., எப்படினு தெரியுமா?

இப்படி தேசிய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை எடுத்துரைத்து வருவதால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைப்பார்களா? என பொறுத்திருந்து பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here