என்ன தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் சம்பளமா ??? – அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள் !!!

0

தடுப்பூசியின் முக்கியத்துவத்தை  உணர்த்தும் வகையில் உத்தர பிரதேச மாநிலம், பிரோசாபாத் மாவட்ட ஆட்சியர்,அனைத்து அரசு ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும்,இல்லையென்றால் அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் ஒரு அதிரடி வாய்மொழி உத்தரவை  அறிவித்து உள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியும் நம்மில் பலர் அதனை தடுப்பூசி செலுத்த மறுக்கிறோம்.தடுப்பூசியின் அவசியத்தை புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றோம். எனவே மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதத்தில் பிரோசாபாத் மாவட்ட கலெக்டர் இத்தகைய உத்தியைக் கையாண்டு உள்ளார்.

இதனடிப்படையில் அந்த மாவட்ட தலைமை வளர்ச்சி அலுவலர் கூறியதாவது, தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களுக்கு அந்த அந்த துறைகளின் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.இந்த உத்தரவால் தற்போது அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here