நாடு முழுவதும் 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் பணிபுரியும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றனர்.
ஐஸ்வர்யா ராய் குறித்து தவறாக பேசிய கிரிக்கெட் வீரர்., கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்!!
அந்த வகையில் யூனியன் பிரதேசமான லடாக் அரசு ஊழியர்களுக்கும் ஜூலை 1 முதல் அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில நிதித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.