TNPSC குரூப் 1 தேர்வுக்கு அரசு சார்பில் பயிற்சி? முழு விவரங்கள் உள்ளே!

0
TNPSC குரூப் 1 தேர்வுக்கு அரசு சார்பில் பயிற்சி? முழு விவரங்கள் உள்ளே!
TNPSC குரூப் 1 தேர்வுக்கு அரசு சார்பில் பயிற்சி? முழு விவரங்கள் உள்ளே!
TNPSC குரூப் 1 தேர்வுக்கு அரசு சார்பில் பயிற்சி? முழு விவரங்கள் உள்ளே!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி குரூப் 1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த தேர்வுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 30 ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் TNPSC குரூப் 1 தேர்வுக்கு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கு நேரடி கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை (ஆகஸ்ட் 18) முதல் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here