அரசு பேருந்தில் பயண கட்டணத்தை உயர்த்த திட்டமா? போக்குவரத்து துறை அமைச்சரே வெளியிட்ட அறிவிப்பு., கர்நாடகாவில் பரபரப்பு!!!

0
அரசு பேருந்தில் பயண கட்டணத்தை உயர்த்த திட்டமா? போக்குவரத்து துறை அமைச்சரே வெளியிட்ட அறிவிப்பு., கர்நாடகாவில் பரபரப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் மூலமாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் உள்ளூர் முதல் வெளியூர், வெளிமாநிலம் போன்ற பயணங்களுக்கு சாதாரண கட்டணத்திலே பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வு, வாகன உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கர்நாடக அரசு பேருந்தில் கட்டண உயர்வை அமல்படுத்தலாம் என அம்மாநில நிதித்துறை பரிந்துரை செய்தது.

இதையடுத்து அரசு பேருந்தில் கட்டண உயர்வு வந்துவிடுமோ? என பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, “டிக்கெட் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க இப்போதைக்கு திட்டம் இல்லை. இதற்காக எவ்வித குழுவும் அமைக்கப்படவில்லை.” என ஆறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here