மீண்டும் ” தமிழ்நாடு” என்பதை தவிர்த்த ஆளுநர்., பொங்கல் அழைப்பிதழால் வெடித்த சர்ச்சை!!

0
மீண்டும்
மீண்டும் " தமிழ்நாடு" என்பதை தவிர்த்த ஆளுநர்., பொங்கல் அழைப்பிதழால் வெடித்த சர்ச்சை!!

2023 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் சென்னையில் உள்ள தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொடங்கியது. ஆனால் இந்த கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்த சில செயல்கள் கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தில் தமிழகத்திற்கான பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இதில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் சில அறிவிப்புகளை கூறவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் ஆளுநர் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே வெளிநடப்பு செய்தார். இதற்கு தற்போது பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு.., இதை கண்டிப்பா பலோவ் பண்ணனும்.., அரசு உத்தரவு!!

இந்நிலையில் மீண்டும் பொங்கல் விழாவுக்கான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்துள்ளார். அதாவது தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதில் தமிழக ஆளுநர் என்று மட்டுமே அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டுருக்கிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here