தமிழ்நாட்டை தமிழகம் எனக்கூறியது வேற அர்த்தம்.., ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!!!

0
தமிழ்நாட்டை தமிழகம் எனக்கூறியது வேற அர்த்தம்.., ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!!!
தமிழ்நாட்டை தமிழகம் எனக்கூறியது வேற அர்த்தம்.., ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!!!

அண்மையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதில் தன்னார்வலர்களை பாராட்டிய ஆளுநர் தமிழ்நாடு என்று குறிப்பிடுவதை விட தமிழகம் என்று குறிப்பிட்டால் முறையாக இருக்கும் என பேசியுள்ளார். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்த்து பல்வேறு கட்சி தலைவர்களும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில் “அந்தக்காலத்தில் தமிழ்நாடு என்ற பெயர் இருக்கவில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் காசி தமிழ் சங்க நிகழ்ச்சியில் காசிக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ள வரலாற்று பண்பாட்டு சூழலை குறிக்கவே தமிழ்நாடு என்பதை தமிழகம் என கூறினால் பொருத்தமாக இருக்கும் என கூறினேன்.

இன்ஸ்டா லைவில் ஓவியா மீது பாய்ந்த Boy Friend.., என்னடா நடக்குது அங்க.. ஷாக் வீடியோ!!

ஆனால் இந்த செய்தியை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான செய்தியாக எடுத்துக் கொள்வது யதார்த்தத்துக்கு எதிரானது. மேலும் இந்த வாதங்கள் ஊடகங்களில் விவாதப்பொருளாகி வருவது மிகவும் வருந்தத்தக்க செயல் ஆகும். இதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்போது விளக்கம் அளித்தேன்” என ஆளுநர் மாளிகையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here