அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., நவம்பர் 23ல் கலைத்திருவிழா.., வின் செய்தவர்களுக்கு காத்திருக்கும் பரிசு!!

0
அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., நவம்பர் 23ல் கலைத்திருவிழா.., வின் செய்தவர்களுக்கு காத்திருக்கும் பரிசு!!
அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., நவம்பர் 23ல் கலைத்திருவிழா.., வின் செய்தவர்களுக்கு காத்திருக்கும் பரிசு!!

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

கலைத்திருவிழா :

இன்றைய சூழ்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே இருக்கும் சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளி வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக கலைத் திருவிழா நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கலைத் திறமைகளை அறியும் விதமாக வருகிற நவம்பர் 23ஆம் தேதி கலை திருவிழா நடத்தப்படுகிறது. மேலும் இந்தப் போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. முதல் பிரிவில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையும், இரண்டாவது பிரிவில் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையும், மூன்றாவது பிரிவில் 11 ஆம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை என ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.

தமிழகத்தில் உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கவனத்திற்கு.,,அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

இந்த போட்டிகளில் வெற்றி பெற மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்க இருக்கும் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். இதை தொடர்ந்து ஜனவரி நடக்க இருக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், விருதுகள் போன்றவை கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் 20 மாணவர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here