தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு – முதல்வர் அதிரடி!!

0

தமிழக அரசு ஊழியர்கள் தங்களது 59வது வயதில் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், தற்போது இந்த வயது வரம்பை தமிழக முதலமைச்சர் உயர்த்தியுள்ளார்.

அரசு ஊழியர்கள்:

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல முக்கியமான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை தமிழக முதல்வர் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பை அதிகரித்துள்ளார். ஏற்கனவே கடந்த கொரோனா காலத்தில் அதிக நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயதை 58ல் இருந்து 59 ஆக அதிகரித்தனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதனை மீண்டும் அதிகரித்துள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசு பள்ளிகள், அரசின் உதவி பெரும் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தும்.

தமிழகத்தில் 9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் “ஆல்பாஸ்” – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

தற்போது இந்த அறிவிப்பினால் ரூ.60 ஆயிரம் கோடி வரை ஓய்வூதிய பயன்கள் வழங்குவது மிச்சமாகும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் தற்போது கிளம்பி வருகிறது. காரணம் இந்த வயது வரம்பு உயர்வு காரணமாக தமிழகத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறையும் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here