“அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் தகும்”- ஆளுநர் கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!!!

0
"அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் தகும்"- ஆளுநர் கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!!!

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் R.N.ரவி அரசு பள்ளி ஆசிரியர்கள் குறித்து பேசியதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

அன்பில் மகேஷ்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் தமிழகத்தின் ஆளுநர் R.N.ரவி சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள் என சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது தமிழகத்தில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சொல்லப்போனால் 100 % மாணவர்களில் 73% மாணவர்கள் தனியார் பள்ளியிலும், 27% மாணவர்கள் அரசு பள்ளிகளிலும் படிக்கின்றனர். ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் தான் அதிக சம்பளம் ஈட்டுகின்றனர் என கூறியிருந்தார்.

IND vs AUS: “இன்னும் 4 ரன்கள் எடுத்தால் போதும்”…, ஆசிய அளவில் சாதனை படைக்க இருக்கும் ரோஹித் சர்மா!!

இவரின் இந்த கருத்தால் அரசு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆளுநர் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறைக்கு 40,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து வரும் கல்வியாண்டில் பல்வேறு திட்டங்களை செய்யப்படுத்த உள்ளோம்.

மேலும் மாணவர்களின் திறனை மேம்படுத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆளுநர் R.N.ரவியும் ஒரு அரசு பள்ளியில் படித்தவர் தான். ஆனால் அவரே ஆசிரியர்கள் சம்பளம் குறித்து பேசியது வேதனை அளிக்கிறது. ஆசிரியர்கள் படும் கஷ்டத்துக்கு அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் தகும் என பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here