
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், 2022 – 2023 ஆம் கல்வியாண்டுக்கான அனைத்து தேர்வுகளும் கடந்த ஏப்ரல் 28ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறையை உற்சாகமாகக் களித்து வருகின்றனர். நடந்து முடிந்த இந்த கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின், படைப்பு திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு போட்டிகளை அரசு சார்பில் நடத்தியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இந்த போட்டிகளில், பல்வேறு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் வெற்றிகளை குவித்து அசத்தினார். இவர்களுக்காக தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளார். அதாவது, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 50 மாணவர்களை தேர்வு செய்து, அவர்களை இன்ப சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளது.
மக்களே உஷார்.., நாளை இந்த பகுதிகளில் மின்தடை.., அறிவிப்பு வெளியீடு!!
இந்த 50 மாணவர்களை சில குழுக்களாக பிரித்து, ஒரு குழுவை அமெரிக்காவுக்கும், மற்ற குழுக்களைப் பின்லாந்து, ஸ்விடன் உள்ளிட்ட நாடுகளுக்கும் வரும் 12ம் தேதி அழைத்து செல்ல உள்ளனர். மீண்டும் இவர்கள் வரும் மே 18ம் தேதி தமிழக திரும்ப இருக்கின்றனர். இவர்களுடன், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.