வங்கி கணக்கில் பணம் செலுத்துவதால் அரசுக்கு ரூ. 2.2 லட்சம் கோடி மிச்சம்., மத்திய அரசு பெருமிதம்!!

0
வங்கி கணக்கில் பணம் செலுத்துவதால் அரசுக்கு ரூ. 2.2 லட்சம் கோடி மிச்சம்., மத்திய அரசு பெருமிதம்!!
வங்கி கணக்கில் பணம் செலுத்துவதால் அரசுக்கு ரூ. 2.2 லட்சம் கோடி மிச்சம்., மத்திய அரசு பெருமிதம்!!

அரசின் நலத்திட்டங்களை பயனர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவதால், இதுவரை அரசுக்கு சுமார் 2.2 லட்சம் கோடி மிச்சமாகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசு தகவல்:

மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது மக்களுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் அனைத்தும், சமீபகாலமாக பயனர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக பிரதமரின் ஜன்தன் யோஜனா என்ற பெயரில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதன் மூலம், பயனர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது குறித்து பேசிய, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் அஜய் சேத் சில முக்கிய தகவல்களை தெரிவித்தார். அதாவது, வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்தும் இத்திட்டத்தின் மூலம் அரசுக்கு சுமார் 2.2 லட்சம் கோடி மிச்சமாகி உள்ளதாக தெரிவித்தார்.

ஜாக்டோ ஜியோ திடீர் போராட்டம்.,10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரிக்கை! அரசுக்கு நெருக்கடி!!

இத்திட்டத்தின் மூலம் போலியான பயனர்கள் கண்டறியப்பட்டு, இடைத்தரகர்களின் இடைச்சொருகல் இல்லாமல் பயனர்களுக்கு நேரடியாக பணம் சென்று சேர்ந்து உள்ளதாகவும், இதில் ஏற்படும் ஊழல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here