தமிழ்நாட்டின் உதவியுடன் அணை கட்டிய கர்நாடக அரசு – தமிழகத்துக்கு நீர் வரத்து குறைவு!!!

0
தமிழ்நாட்டின் உதவியுடன் அணை கட்டிய கர்நாடக அரசு - தமிழகத்துக்கு நீர் வரத்து குறைவு!!!
தமிழ்நாட்டின் உதவியுடன் அணை கட்டிய கர்நாடக அரசு - தமிழகத்துக்கு நீர் வரத்து குறைவு!!!

கர்நாடக தென்பெண்ணை ஆற்றின் மார்கண்டேய நதியில் கட்டப்பட்டுள்ள புதிய அணையால் நீர் வரத்து குறைவு, இதனால் பெரிய அளவில் பாதிப்படையும் தமிழக விவசாயிகள். இந்த அணையின் கட்டிடட பணிக்கும் கட்டிட பொருள்களும் தமிழ்நாட்டில் இருந்து தான் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

தமிழக மக்களை வைத்தே அணை கட்டிய கர்நாடக அரசு..

தென்பெண்ணை என்னும் ஆறு கர்நாடகாவில் உள்ளது, இந்த ஆற்றின் துணை நதியாக மார்கண்டேய நதி யார்கோல் என்ற கிராமத்தில் உள்ளது. இந்த மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை ஒன்றை நதியின் குறுக்கே கட்டியுள்ளது. 40மீட்டர் உயரமும் 414மீட்டர் நீளம் கொண்டு குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த குறுக்கே கட்டப்பட்ட அணையினால் அதிகம் பாதிப்புள்ளதாக தகவல் வந்துள்ளது, அது என்னவென்றால் கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் உள்ள படேதலாவ் மற்றும் கே.ஆர்.பி. ஆகிய இரு அணைக்கும் வரும் நீர் வரத்து குறைந்துவிடும். அதுமட்டுமில்லலாமல் இந்த நீர் வரத்து குறைவினால் 50,000 ஹெக்டேர் அளவுக்கு நிலங்கள் அனைத்தும் நீர் பாசன வசதிகள் கிடைக்காமல் விவசாயிகள் அனைவரும் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவார்கள், இந்த தென்பெண்ணை ஆற்றின் நீரினால் தமிழக்த்தில உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் அதிகம் பதிப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.

தமிழக மக்களை வைத்தே அணை கட்டிய கர்நாடக அரசு..
தமிழக மக்களை வைத்தே அணை கட்டிய கர்நாடக அரசு..
தமிழகத்தின் மூலம் கட்டிட வசதிகளும்…

இந்த மார்கண்டேய நதியின் கட்டுவதற்கு முழுக்க முழுக்க தமிழகமும் உடந்தையாக இருந்துள்ளது, நதியை கட்டுவதற்கான பொருள்கள் ஆன மணல், ஜல்லி, இரும்புக்கம்பிகள், சிமெண்ட் மற்றும் கட்டிடட தொழிலார்கள் என அனைத்து வசதிகளும் தமிழகத்தின் மூலமாக இந்த அணையை கட்ட கர்நாடகாவிற்கு பயன்படுத்தியுள்ளது ஒரு தனியார் நிறுவனம். இந்த அணையை கட்ட ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துடன் 25 துணை நிறுவனங்கள் துணை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த 25 துணை நிறுவனத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த நிறுவனம் ஒன்று பங்கீட்டுள்ளது. எம் சாண்ட் வகை மணல்தான் கட்டிட பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த எம் சாண்ட் மணலை சேலத்தில் இருந்து இந்த நிறுவனம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட பணிக்கு தமிழகம் பாதிக்கும் என்று தெரிந்தும் தமிழகத்தில் இருந்து அணைத்து வசதிகளும் பெற்றுக்கொண்ட நிறுவனங்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here