அரசு பணி நியமனங்கள்.,, புதுச்சேரி அரசுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்!!

0
அரசு பணி நியமனங்கள்.,, புதுச்சேரி அரசுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்!!
அரசு பணி நியமனங்கள்.,, புதுச்சேரி அரசுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்!!

அரசு பணி நியமனங்கள் விதிகளை பின்பற்றித்தான் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்து மனு தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி:

அரசு பணிகளில் சேர வேண்டும் என்பது பலரது வாழ்க்கை லட்சியமாக உள்ளது. மேலும் இந்த பணிகள் கிடைக்க வேண்டும் என்றால் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெறுதல் உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளன. இருப்பினும் சிலர் குறுக்கு வழியில் அரசு பணியில் சேர்ந்து விடலாம் என, மோசடி கும்பலிடம் சிக்கி தங்கள் பணத்தையும் இழந்து வருகின்றனர். இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை பல அறிவுரைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர், புதுச்சேரி பொதுப்பணித் துறையில் விதிகளை மீறி 10 ஆயிரம் பேர் ஆட்சேர்ப்பு செய்ய முயற்சி நடந்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் இந்த வழக்கு குறித்து உரிய விவரங்களுடன் நேரில் ஆஜராகுமாறு புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் அடை மழை.,, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! உங்க மாவட்டம் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், புதுச்சேரி பொதுப்பணித்துறை செயலாளர் குமார் நேரில் ஆஜரானார். இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை விதிகளை மீறி எந்த ஒரு பணி நியமனமும் நடைபெறவில்லை என்றும், இனி பணி நியமனங்கள் நடந்தாலும் விதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கும் என்று அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதி அளித்தார். இதையடுத்து நீதிபதி, இது குறித்து உத்தரவாதம் கொடுத்து மனு தாக்கல் செய்யுமாறு புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார் .மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here