போராடும் மல்யுத்த வீரர்களுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தை…, வெளியான அதிகாரப்பூர்வ தகவல் உள்ளே!!

0
போராடும் மல்யுத்த வீரர்களுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தை..., வெளியான அதிகாரப்பூர்வ தகவல் உள்ளே!!
போராடும் மல்யுத்த வீரர்களுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தை..., வெளியான அதிகாரப்பூர்வ தகவல் உள்ளே!!

இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் தலைமையில் ஒரு மாதங்களுக்கு மேலாக மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் ரீதியான குற்றங்களை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மே 28 நடந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் நுழைந்து டெல்லியில் தொடர்ந்து போராட்டங்களை நடத்த வீரர்கள் முற்பட்டனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால், டெல்லி காவல்துறையினர் இவர்களை தடுத்து நிறுத்தியதோடு விழா நடைபெற்ற இடத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். இதனால், வீரர்கள் தங்களது ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை நதியில் வீசி எறியை ஹரித்துவார் சென்றுள்ளனர். அங்கு இவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் விவசாய அமைப்பினர், குறிப்பிட்ட நாட்களுக்குள் போராட்டத்திற்கு முடிவு கிடைக்க வில்லை என்றால் வீரர்களுடன் இணைந்து நாங்களும் போராட்ட களத்தில் குதிப்போம் என்று தெரிவித்திருந்தனர்.

தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்வு? மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு!!!

இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள் சில நாட்களுக்கு முன் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், மல்யுத்த வீரர்களுடன் அவர்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது. அதற்காக மல்யுத்த வீரர்களை மீண்டும் ஒருமுறை அழைத்துள்ளேன் என விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here