மீண்டும் மாங்கல்ய பாக்ய திருமண திட்டம்.,  யாரெல்லாம் இதில் பயன்பெறலாம்., அரசு முக்கிய அறிவிப்பு!! 

0
மீண்டும் மாங்கல்ய பாக்ய திருமண திட்டம்.,  யாரெல்லாம் இதில் பயன்பெறலாம்., அரசு முக்கிய அறிவிப்பு!! 
சமீப காலமாக பெருவாரியான மக்கள் ஆடம்பரமான திருமணங்களை விரும்புகின்றனர். அதிக பொருட்செலவில் முடியும் இத்திருமணத்திற்காக பலர் கடன் வாங்கும் நிலை உருவாகி வருகிறது. ஆனால் ஏழை மற்றும் நலிவடைந்த திருமண தம்பதிகளுக்கு அரசே தனது செலவில் திருமணம் செய்து வைத்து வருகிறது. மேலும்  இந்த திட்டம் சில வருடத்திற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  ஆனால் தற்போது மீண்டும் இந்த திட்டத்தை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தபட்ட நிலையில்  இது குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த திட்டத்தில் மணமகனுக்கு வேட்டி சட்டையுடன் கையில் ரூ. 5000, மற்றும் மணமகளுக்கு புடவையுடன்  மாங்கல்யம் என மொத்தமாக ரூ. 55000 என அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் இந்த மணமகன் மற்றும் மகள் திருமண வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அரசின் இந்த சிறப்பான திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here