அரசின் போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களே…,  இதை செய்தால் கட்டாயம் சிறை தான்.., வெளியான நியூ அப்டேட்!!

0
மத்திய மற்றும் மாநில அரசுகள், தங்களது கீழ் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. அவ்வாறு நிரப்பப்படும் போட்டித் தேர்வுகளில், பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றனர். அதாவது, அரசின் போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற மோசடி குற்றங்களை தேர்வர்கள் பலர் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு அரசு அதிகாரிகளும் துணை நிற்கின்றனர். இதனால், தேர்வு முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான மசோதாவை கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மற்றும் இவர்களுக்கு உதவும் அதிகாரிகள் உட்பட்டோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பதற்கான மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here