அரசு ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதத்திற்குள் பதவி உயர்வு…, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அறிவிப்பு!!

0
அரசு ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதத்திற்குள் பதவி உயர்வு..., மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அறிவிப்பு!!
அரசு ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதத்திற்குள் பதவி உயர்வு..., மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அறிவிப்பு!!

இந்தியாவில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய குறிக்கோளாக இருப்பது அகவிலைப்படி உயர்வு, பதவி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்டவைகள் தான். இதில், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் அகவிலைப்படி உயர்வை சமீபத்தில் அறிவித்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதே போல, தகுதி அடிப்படையில் அரசு ஊழியர்கள் பலருக்கு பதவி உயர்வும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் மீது ஏதேனும் புகார்கள் இருந்தால் அந்த விசாரணை முடியும் வரை பதவி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால், நிர்வாகத் தவறுகளால் அரசு ஊழியர்கள் சிலருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இது தொடர்பாக, 12 ஆண்டுகளுக்கு முன் அரசு ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கான விசாரணை சமீபத்தில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் நடைபெற்றுள்ளது.

ச்சீ.., ஒரு உயிர கொன்னுட்டோம்னு குற்ற உணர்ச்சி இல்லையா?? இர்ஃபானை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!

இந்த விசாரணையின் முடிவில், அரசின் நிர்வாகத் தவறுகளை மட்டுமே காரணம் காட்டி எந்த தவறும் செய்யாமல் இருக்கும் அரசு ஊழியருக்கு பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க கூடாது என தீர்ப்பளித்து உள்ளது. மேலும், வழக்கு தொடர்ந்த அந்த அரசு ஊழியருக்கு அடுத்த 3 மாதத்திற்குள் பதவி உயர்வுக்கான பலன்களை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here