அரசு ஊழியர்களே அடுத்த அகவிலைப்படி உயர்வுக்கு ரெடியாகிக்கோங்க…, ஆரம்ப சம்பளமே ரூ.26,000 ஆஆ??

0
அரசு ஊழியர்களே அடுத்த அகவிலைப்படி உயர்வுக்கு ரெடியாகிக்கோங்க..., ஆரம்ப சம்பளமே ரூ.26,000 ஆஆ??
அரசு ஊழியர்களே அடுத்த அகவிலைப்படி உயர்வுக்கு ரெடியாகிக்கோங்க..., ஆரம்ப சம்பளமே ரூ.26,000 ஆஆ??

7 வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்துவது வழக்கமான ஒன்றாகும். இதன்படி, நடப்பு வருடம் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்திலும், ராஜஸ்தான், அசாம், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் அடுத்தடுத்து அறிவித்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், தமிழக அரசானது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4%-ஆக அதிகரித்து 38%-திலிருந்து 42%-ஆக உயர்த்தியது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, CPI-IW மற்றும் AICPI குறியீட்டு பொறுத்து தான் அகவிலைப்படி ஆனது உயர்த்தப்படுகிறது. இதில், AICPI குறியீட்டு எண்கள் குறித்த அப்டேட் மே 31 வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக பள்ளிகளில் விடுமுறை காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.., கொண்டுவரப்பட்ட முக்கிய கட்டுப்பாடு!!

இதனை தொடர்ந்து, 6 வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் வழங்கப்படும் ஃபிட்மெண்ட் காரணியை 6 வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் மாற்றவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றனர். அவ்வாறு மாற்றப்பட்டால், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஃபிட்மெண்ட் காரணியும் 2.57%-திலிருந்து 3.68 %-மாக உயர்த்தி வழங்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000ல் இருந்து ரூ.21,000 முதல் ரூ.26,000 வரை உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஒருவரது அடிப்படை சம்பளத்தில் இருந்து 3000 முதல் 8000 வரை உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here