தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஆம்புலன்ஸாக மாற்றம்??அமைச்சர் அதிரடி!!

0

தமிழகத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது மக்களுக்கு உதவும் வகையில் பேருந்துகளை ஆம்புலன்ஸாக மாற்ற ஆலோசிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசு பேருந்துகள்:

தமிழகத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் தற்போது மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் குவிந்து வருகின்றனர். மேலும் மருத்துவாமனைகளில் தற்போது படுக்கை வசதி குறைவாக இருப்பதன் காரணமாக நோயாளிகள் அனைவரும் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் அவர்களுக்கு தாமதமாகவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது இந்நிலையில் இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகள் பயனடையும் வகையில் சென்னையில் தற்போது புதிதாக அதிக அளவிலான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘108’ தலைமை அலுவலகத்தில் வேளைக்கு ஆட்கள் தேவை – 100 காலியிடங்கள்!!

இந்நிலையில் ஆம்புலன்ஸ் சேவையை மேலும் அதிகரிக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் தற்போது ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதி பொருந்திய அரசு பேருந்துகளை ஆம்புலன்ஸாக மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து சுகாதாரத்துறையிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here