மக்களுக்கு சூப்பர் வசதி.. அரசு பேருந்துகளில் இனி கட்டண சலுகை – தமிழக அரசு அறிவித்த முடிவு!!

0
மக்களுக்கு சூப்பர் வசதி.. அரசு பேருந்துகளில் இனி கட்டண சலுகை - தமிழக அரசு அறிவித்த முடிவு!!

தமிழகத்தில் இயங்கும் அரசு பேருந்துகளில் தொலைதூர பயணங்களுக்கு Up and down டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீத கட்டண சலுகை:

தமிழகத்தில் ஆட்சியை பிடித்து மக்களுக்காக பல திட்டங்கள் கொண்டு வந்து தி.மு.க ஆட்சி கொண்டு வந்துள்ளது. அதில் குறிப்பாக மக்களுக்கு அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும் திட்டம் மகளிர் இலவச பேருந்து திட்டம். மேலும் அரசு விரைவு பேருந்திலும் புதுசு புதுசாக அம்சங்கள் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது தமிழக போக்குவரத்துத்துறை. அந்த வகையில் அரசு விரைவு பேருந்துகளில் விவசாய மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் குறைந்த விலையில் பார்சல் அனுப்பும் வசதியை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் ஒரு வசதி அரசு பேருந்துகளில் மக்களுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, தொலைதூர பகுதிக்கு செல்லும் பயணிகள் அரசு விரைவு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்கின்றனர். அதே போல் பயணிகள் அரசு பேருந்துகளில் தொலைதூர நகரங்களுக்கு செல்வதற்கும் மற்றும் மீண்டும் அதே இடத்திற்கு வருவதற்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட்டில் 10 சதவீத கட்டண சலுகை என்ற திட்டத்தை தமிழக அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சலுகை கட்டணத்தில் பயணிப்போருக்கும், பண்டிகை கால சிறப்பு பேருந்துகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் வரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here