தமிழகத்தில் பேருந்து கட்டணங்களை உயர்த்த திட்டம்..? அரசு முக்கிய ஆலோசனை..!

1

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் 44 நாட்களாக அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய ஊரடங்கு முடிந்ததும் பேருந்து பயண கட்டணங்களை உயர்த்த அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

1000 கோடி ரூபாய் நஷ்டம்:

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள கோட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு பேருந்துகளின் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் என மொத்தமாக 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் பணிசெய்து வருகின்றனர். பேருந்துகள் கட்டணம் மூலம் அரசுக்கு மாதம் 850 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்து வந்தது.

மாஸ்க் அணிந்தால் பேருந்தில் அனுமதி, 50% பயணிகள் – போக்குவரத்துத் துறை விதிகள் வெளியீடு..!

தமிழகத்தில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – சென்னையில் ஒரே நாளில் 4 பேர் பலி..!

அரசிற்கு கிடைக்கும் வருவாயில் 450 கோடி ரூபாய் பணியாளர்களுக்கு சம்பளமாகவும், மீதமுள்ள பணம் டீசல், பேருந்து உதிரிபாகங்கள், வரிகள் போன்றவற்றிற்காக செலவிடப்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அரசுக்கு 1000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது போன்ற பிரச்சனைகள் எழுவதால் ஊரடங்கு முடிந்ததும் பேருந்து கட்டணங்களை சற்று உயர்த்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here