கொரோனவால் PF பணத்தை எடுத்துக் கொள்ள புதிய சலுகை – பொதுமக்கள் மகிழ்ச்சி..!

0

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இன்றி தவிக்கின்றனர். 21 நாட்கள் எப்படி கழிக்கப்போகிறோம் என்ற பீதியில் உள்ளனர். இதனை தொடர்ந்து ஊழியர்கள் தங்களது அவசரத் தேவைக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய நடைமுறை வந்துள்ளது.

EPFO இணையதளம்

மேலும் இந்த அறிவிப்பின் படி, தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் இவற்றில் எது குறைவோ அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதனைத் திருப்பிச் செலுத்த தேவையில்லை எனவும் கூறப்படுகிறது. இது மற்ற திட்டங்களைப் போல் அல்லாமல், பதிவு செய்த மூன்று நாட்களுக்குள் கிடைக்க உறுதி செய்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது நிலவும் சூழலில், 60 மில்லியன் வாடிக்கையாளர்களும் புதிய விதிமுறைகளின் படி தங்கள் கணக்கிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் EPFO இணையதளத்தில் (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) தங்களது UAN எண்ணை பதிவு செய்து ரகசிய பாஸ்வேர்டை பதிவு செய்து கணக்கிற்குள் செல்ல வேண்டும்.

சிண்டிகேட், பஞ்சாப் உட்பட 10 வங்கிகள் இனிமேல் கிடையாது, வேறு வங்கிகளுடன் இணைக்கப்படும்..! எப்போது முதல் தெரியுமா..?

அங்கு ஆன்லைன் சர்வீசஸ் மற்றும் CLAIM என்ற பிரிவிற்குச் சென்று அதில் Outbreak of pandemic என்பதை தேர்வு செய்தால், ஓடிபி வரும். அதனை பதிவு செய்தால் விதிமுறைகளின் படி தாங்கள் கேட்ட தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும், ஆனால் அதற்கு முன்னர் உங்களது பேங்க் செக் மற்றும் பாஸ்புக்கினை ஸ்கேன் செய்து, JPG and JPEG பார்மேட்டில் 100 கேபி முதல் அதிகபட்சமாக 500 கேபி வரை உள்ளவாறு அப்லோடு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என எனத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் பயன் பெற்றுக் கொள்ள முடியும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here