இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்: முதல் அறிக்கையை சமர்ப்பித்த கூகுள்!!!

0

இந்தியாவின் புதிய தொழில்நுட்ப விதிகளை ஏற்றுக்கொண்டதற்கு பிறகு, கூகுள் தனது முதல் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 59,350 தகவல்களை நிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இணையத்தின் வாயிலாக போலி செய்திகள் பரப்பப்படுவதையும் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக ஊடகங்கள் உபயோகிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், சமூக ஊடகங்கள் மற்றும் OTT தளங்களுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு வெளியிட்டது.

இந்த விதிகளை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு அந்நிறுவங்களுக்கு மூன்று மாதம் அவகாசம் அளித்தது. பின்னர் இந்த  புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு அனைத்து நிருவனங்களும் ஒப்புதல் தெரிவித்தன. தற்போது கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டபடி அதன் முதல் அறிக்கையை சம்பித்துள்ளது.

அந்த அறிக்கையில் கூகுள் கூறியதாவது, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 59,350 தகவலை அந்நிறுவனம் நிக்கியுள்ளதாகவும், அதில் பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் 27,762 தகவல்கள் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்த புகார்களில் 96% காப்பிரைட் சம்மந்தப்பட்ட புகார்கள் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here