கொரோனா நோய்த்தொற்று எதிரொலி – இந்தியாவிற்கு 135 கோடி நிதியுதவி வழங்கிய கூகிள்!!

0
முன்னணி இசையமைப்பாளருக்கு கூகுள் கொடுத்த அங்கீகாரம் - அவரது பிறந்தநாளில் கிடைத்த கெளரவம்!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது கூகிள் நிறுவனம் இந்தியாவிற்கு நிதி உதவி செய்துள்ளது.

கூகிள் நிதியுதவி

இந்தியாவில் கடந்த ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் முதல் அலையை விட தற்போது பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் மோசமாக பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை சரிசெய்ய முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இந்தியாவில் சுமார் 2,812 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்தம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,95,213 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது பிரபல இணையதள நிறுவனமான கூகிள் நிறுவனம் இந்தியாவிற்கு நிதியுதவி வழங்கியுள்ளது.

மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – அதிர்ச்சியில் மக்கள்!!

இந்தியாவின் மருத்துவ செலவிற்காக கூகிள் நிறுவனம், ஊழியர்கள் ரூ.135 கோடி நிதியுதவி செய்துள்ளது. தற்போது இந்த செய்கையினால் அதன் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவின் நிலை குறித்து கவலையளிக்கிறது என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் கருவிகள் வாங்குதல் போன்றவற்றிற்கு மைகோரோசாப்ட் நிறுவனம் கண்டிப்பான முறையில் இந்தியாவிற்கு உதவி புரியும் என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here