Facebook தகவல்களை திருடும் 25 செயலிகளை தடை செய்த Google

0

பேஸ்புக் விவரங்களைத் திருடும் 25 ஆண்ட்ராய்டு செயலிகளை கூகுள் தடை செய்துள்ளது .

iosஐ காட்டிலும் ஆண்ட்ராய்டு 5 மடங்குக்கும் மேலான கைபேசி மற்றும் மற்ற சாதனங்களில் அதிகமாக காணப்படுகின்றது , இதனால் google play ஸ்டோரில் ஆப் store ஐ காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் செயலிகள் காணப்படுகின்றன.

பிரெஞ்சு சைபர் பாதுகாப்பு நிறுவனமான Evina சமீபத்தில் கூகுளை எச்சரித்தது தொடர்ந்து கூகிள் இந்த அதிரடியான முடிவை எடுத்துள்ளது. evina கொடுத்த அறிக்கையின்படி இந்த அணைத்து செயலிகளும் 25 லட்சத்திற்கும் மேலான பதிவிறக்கங்களை கொண்டுள்ளது.

இந்த 25 செயலிகளும் தீம்பொருளுடன் உடன் வருகின்றன மற்றும் இவை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பேஸ்புக் உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தும்போது அவற்றைப் பதிவு செய்கின்றன. இந்த 25 ஆப்களில் பெரும்பாலானவை பைல் மேனேஜர், பிளாஷ் லைட், வால்பேப்பர் மேனேஜ்மென்ட், ஸ்கிரீன்ஷாட் எடிட்டர் மற்றும் வெதர் போன்ற சேவைகளை வழங்குகின்றன.

evina கூறுகையில் இந்த 25 செயலிகளில் பெரும்பாலானவை கூகிள் play ஸ்டோரில் ஒரு வருடத்திற்கும் மேலாக இருந்து வந்துள்ளது .

எவினாவின் கூற்றுப்படி, “பயனர் தங்கள் ஸ்மார்ட்போனில் சர்ச்சைக்குரிய பயன்பாட்டை அறிமுகப்படுத்தியதும், தீங்கிழைக்கும் பயன்பாடு ஒரு பயனர் சமீபத்தில் திறந்த மற்றும் தொலைபேசியின் முன்புறத்தில் இருந்த பயன்பாட்டைக் கண்டறிந்தது. இது ஒரு பேஸ்புக் பயன்பாடாக இருந்தால், தீம்பொருள் ஒரே நேரத்தில் பேஸ்புக்கை ஏற்றும் உலாவியைத் தொடங்கும். உலாவி முன்புறத்தில் காட்டப்படும், இந்த பயன்பாடு அதைத் துவக்கியது என்று நீங்கள் நினைக்க வைக்கும்” என்று இணைய பாதுகாப்பு நிறுவனம் விளக்குகிறது.

பயனர் தங்கள் பேஸ்புக் உள்நுழைவு விவரங்களை ஃபிஷிங் பக்கத்தில் இட்டவுடன் , தீங்கிழைக்கும் நபர்களின் தொலைநிலை சேவையகத்திற்கு சான்றுகளை அனுப்புகிறது . இது பேஸ்புக் கணக்கில் சேமிக்கப்பட்ட எல்லா விவரங்களையும் சேகரித்துக்கொள்கிறது . மேலும் இது பயனாளர்கள் தங்கள் பேஸ்புக் கணக்கு வழியாக உள்நுழைந்த பிற வலைத்தளங்களை அணுகவும் அனுமதிக்கிறது.

ஜூன் தொடக்கத்தில் கண்டுபிடிப்புகளை சரிபார்த்த பிறகு கூகிள் அவற்றை அகற்றியது. பிளே ஸ்டோரிலிருந்து பயன்பாடுகளை அகற்றும்போது, ​​கூகிள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களிலும் அவற்றை முடக்குகிறது மற்றும் பிளே ப்ரொடெக்ட் அம்சத்தின் மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கிறது. இந்த 25 செயலிகள் அணைத்து விவரங்களையும் evina அதன் வலைத்தளத்தில் இட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here