கர்நாடகாவிடம் மன்னிப்பு கேட்ட கூகிள் – இதுதான் காரணமா??

0

இந்தியாவின் அசிங்கமான மொழி எது என பயனர் ஒருவரின் தேடலுக்கு கூகிள் கன்னட மொழி என பதில் கூறியிருந்தது. இதனால் கூகிள் கர்நாடகாவிடம் மன்னிப்பு கேட்டது. தற்போது இது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மன்னிப்பு கேட்ட கூகிள்:

தற்போது தொழில்நுட்பம் வளைந்து வரும் நிலையில் இணையத்தின் சேவையும் அதிகமாகி வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் கூகிளின் பங்கு இன்றியமையாதது. கூகிள் நிறுவனம் தகவல் தொழில் நுட்பத்திலும் இணைய மேம்பாட்டிலும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

யூடியூப், ஜிமெயில், கூகிள் மீட்ஸ் மற்றும் பிற பிரபலமான கூகிள் செயலிகள் இயக்கத்தில் உள்ளன. பயனர் தங்களுக்கு தேவையான தரவுகளை கூகிள் இடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது பயனர் ஒருவர் இந்தியாவின் அசிங்கமான மொழி எது என கூகிள் செய்தபோது கன்னடம் என கூகிள் பதில் அளித்துள்ளது. இது பயனர்களை அதிருப்தி படுத்தியுள்ளது. மேலும் ஆத்திரமடைந்த நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது கூகிள் நிறுவனம் தவறாக புரிந்துகொண்டு உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here