ராகுவுடன் சுபகிரகங்கள் இணைந்தால் என்னென்ன நடக்கும்?? தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

0
rahu conjunction with others
rahu conjunction with others

ஒரு ஜாதகத்தில் ராகு இருக்கும் இடம் மிக முக்கியமாகும். நமது ஜாதக கட்டத்தில் ராகு தனித்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் சுபகிரகங்களுடன் இணையும் போது ஆசைகளை தூண்டி விட்டு ஏமாற்றி விடுவார். அந்த வகையில் மற்ற கிரகங்களுடன் ராகு இணைந்தால் என்ன நடக்கும் என பார்க்கலாம் வாங்க.

ராகு

ராகுவிற்கு தனியாக சொந்த வீடுகள் எதுவும் கிடையாது. அவர் ஜாதகத்தில் எங்கு அமர்கிறாரோ அந்த இடத்தை பொறுத்து முழு பலனையும் அளிப்பார். இப்பொழுது உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ராசி கட்டத்தில் ராகு எந்த கிரகங்களுடன் சேர்ந்திருக்கிறார் என்பதை பார்த்துவிட்டு படியுங்கள்.

ராகு + சூரியன்

Surya-Mantra
Surya-Mantra

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

ராகுவுடன் சூரியன் இணையும்போது பதவி ஆசைகளை கூட்டிவிடுவார். அதாவது சூரியன் உயர் பதவிகளுக்கு வழிவகுப்பவர். எனவே அவர் ராகுவுடன் இணையும்போது பதவி ஆசைகளை அதிகரித்து விடுவார்.

ராகு + சந்திரன்

chanadra bhagavaan
chanadra bhagavaan

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் தாயை குறிப்பதாகும். அவர் ராகுவுடன் இணையும்போது தாய்க்கு உடல்நிலை சரி இல்லாமல் போக வாய்ப்புள்ளது. மேலும் ஆடை, ஆபரணங்கள் மீது அதிக ஆசையை தூண்டி விடுவார். மேலும் இவர்கள் வாழ்க்கையில் காதல் அதிகம் இருக்கும்.

ராகு + செவ்வாய்

sevvai magavaan
sevvai bagavaan

இந்த இணைவு ஜாதகத்தில் இருந்தால் அவர்கள் கோழையாக இருப்பார். ஆனால் காதல் விஷயத்தில் கெட்டிக்காரராக இருப்பர். இவர்களுக்கு மன சஞ்சலம் அதிகமாக இருக்கும்.

ராகு + புதன்

puthan bahavan
puthan bahavan

புதன் படிப்புக்காரன் ஆவர். இவர்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்குவர். அதிபுத்திசாலியாக இருப்பர். ஆனால் ராகுவுடன் இணைந்திருப்பதால் இந்த புத்திசாலித்தனம் அவர்களுக்கு குறுக்கு புத்தியை கூட ஏற்படுத்தும்.

ராகு + குரு

குருவுடன் ராகு இணைவதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் போகும் இடத்தில் எல்லாம் விளம்பரத்தை எதிர்பார்ப்பார்கள். மேலும் இவர்கள் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

ராகு +சுக்ரன்

sukrabagavan
sukrabagavan

இந்த சேர்க்கை உள்ளவர்கள் ஆடம்பரத்தை விரும்புபவராக இருப்பர். மேலும் இவர்கள் வாழ்க்கையில் கட்டாயமாக பல காதல்கள் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here