குறைந்தது தங்கத்தின் விலை – சந்தோஷத்தில் மக்கள்!!!

0

தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே உச்சம் தொட்டு வந்த நிலையில், இன்று பவுனுக்கு ரூ.184 குறைந்து ரூ.37080-க்கு விற்பனையாகிறது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

தங்கம் விலை குறைவு:

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. சென்னையில் இன்று  ஒரு கிராம்  ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,635 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,658 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 37,264 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 184 ரூபாய் குறைந்து 37,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தமிழகம் மட்டுமல்லாமல் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,690 என்றும், பெங்களூருவில் ரூ.4,610 என்றும், ஹைதராபாத்தில் ரூ.4,610 என்றும், கேரளாவில் ரூ.4,613 என்றும், டெல்லியில் ரூ.4,698 என்றும், கொல்கத்தாவில் ரூ.4,849 என்றும், ஒசூரில் ரூ.4,612 என்றும், பாண்டிச்சேரியில் ரூ.4,617 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.39952-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலையானது தற்போது வரையில் மட்டும் 0.78% சரிவினைக் கண்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.77.50 ஆக இருந்தது. இன்று அது ரூ.76.60 ஆகக் குறைந்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here