அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – சோக்கத்தில் நகை பிரியர்கள்!!!

0
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(03.11.2022) – முழு விவரம் உள்ளே!!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(03.11.2022) – முழு விவரம் உள்ளே!!

தங்கம் விலையானது மீண்டும் தொடர்ந்து றெக்கை இல்லாமல் பறந்து வருகின்றது. நேற்று மாலை நிலவரப்படி இருந்த தங்கம் விலை; தற்போது சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து உள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பட்டையை கிளப்பும் தங்கம் விலை:

சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் விலை இரண்டாவது நாளான இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் காலை குறைவுடன் தொடங்கிய நிலையில் அதனை தொடர்ந்து மூன்று நாட்களாக விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,611 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,597 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 112 ரூபாய் உயர்ந்து 36,888 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல் நேற்று 4,956 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,970 ரூபாயாக உயர்ந்துள்ளது. மும்பையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் ரூ.4,654, பெங்களூருவில் ரூ.4,575, ஹைதராபாத்தில் ரூ.4,560, கேரளாவில் ரூ.4,592, டெல்லியில் ரூ.4,673, டெல்லியில் ரூ.4,673, ஒசூரில் ரூ.4,575 மற்றும் பாண்டிச்சேரியில் ரூ.4,573 என்று விற்பனை ஆகிறது.

இதனை தொடர்ந்து தற்போது; வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று  ரூ.76.20 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 76,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று விலையை ஒப்பிடும் போது 20 பைசா அதிகமாக உள்ளது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here