இப்படியே போயிட்டு இருந்த என்னைய அருத்தம் …. என்று புலம்பவைக்கும் தங்கத்தின் விலை!!!!

0

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறு முகத்தில் உள்ளது. அதனால்  நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். தற்போது சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்‍கு 144 ரூபாய் உயர்ந்து 37,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆபரணத் தங்கத்தின் விலை:

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும் இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.4630-க்கு விற்பனையாகிறது. அதேபோல, நேற்று 36,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 144 ரூபாய் உயர்ந்து 37,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல் தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,989 ரூபாயாக உயர்ந்து,  8 கிராம் தூய தங்கம் 39,912 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை 20 பைசா உயர்ந்து ரூ.76.30-க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.76,300 ஆக உள்ளது.

மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,751 என்றும், பெங்களூருவில் ரூ.4,585 என்றும், ஹைதராபாத்தில் ரூ.4,585 என்றும், கேரளாவில் ரூ.4,583 என்றும், டெல்லியில் ரூ.4,795 என்றும், கொல்கத்தாவில் ரூ.4,803 என்றும், ஒசூரில் ரூ.4,588 என்றும், பாண்டிச்சேரியில் ரூ.4,587 என்றும் விற்பனையாகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here