நகை பிரியர்களுக்கு ஷாக்., இனி இந்த தங்கத்தை விற்பனை செய்ய அனுமதி இல்லை! அரசு அதிரடி!!

0
நகை பிரியர்களுக்கு ஷாக்., இனி இந்த தங்கத்தை விற்பனை செய்ய அனுமதி இல்லை! அரசு அதிரடி!!
நகை பிரியர்களுக்கு ஷாக்., இனி இந்த தங்கத்தை விற்பனை செய்ய அனுமதி இல்லை! அரசு அதிரடி!!

வாடிக்கையாளர்களின் நலன் கருதி, வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 6 இலக்க குறியீடு உள்ள hallmark முத்திரை பதித்த நகைகளை மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு :

நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின் மவுசு அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாகச் சொல்லப்போனால், தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதன் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. அந்த வகையில் தங்க நகைகள் மற்றும் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய 6 இலக்க HUID ஹால்மார்க் குறியீடு வழங்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த குறியீடு இருக்கும் தங்கமே, தூய தரத்தைக் கொண்ட தங்கம் என அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நகையின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(04.03.2023) – முழு விவரம் உள்ளே!!

இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, வருகிற மார்ச் 31ம் தேதிக்கு பின் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்கத்தை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பின், வாடிக்கையாளர்களுக்கு ஹால்மார்க் முத்திரை பதித்த தங்கத்தை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மத்திய நுகர்வோர் விவகார, உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here