தங்கத்தின் விலை இன்று குறைந்தது – சந்தோஷத்தில் நகை பிரியர்கள்!!!

0
தங்கத்தின் விலை இன்று குறைந்தது - சந்தோஷத்தில் நகை பிரியர்கள்!!!
தங்கத்தின் விலை இன்று குறைந்தது - சந்தோஷத்தில் நகை பிரியர்கள்!!!

தங்கத்தின் விலை இந்த கொரோனா ஊரடங்கால் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது, இந்நிலையில் கடந்த வாரம் சட்டென்று ஏறிய தங்கம் விலை இன்று வார முதல் நாளிலே குறைந்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் அனைவரும் இன்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

குறைந்தது தங்கத்தின் விலை…

தங்கம் என்றால் பெண்களுக்கு மிகவும் அதிகம் பிடித்த முதல் பொருள் ஆகும், அனைத்து பெண்களையும் அதிகம் கவர்ந்த ஒன்றாகும். தங்கத்தின் மீது பெண்கள் அதிகம் முதலீட்டை செலுத்துவார்கள், பெண்கள் மட்டுமல்லாது சர்வதேசச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மேல் அதிக முதலீடுகளை செலுத்திய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் தங்கத்தின் மீது உள்ள மோகம் குறையவில்லை, தங்கத்தின் விலை ஒரு நிலையில் இல்லாமல் வழக்கத்தை விட மாறாக அதிக ஏற்றம் இருந்தது அதேபோல் சற்று விலை குறைந்தும் இருந்தது, இந்நிலையில் கடந்த வாரம் திடிரென்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 வரை ஏறியது. மாத ஆரம்பமே இப்படி விலை ஏற்றத்தை கண்ட மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

குறைந்தது தங்கத்தின் விலை
குறைந்தது தங்கத்தின் விலை

கவலையில் இருந்த அனைவர்க்கும் ஒரு நற்செய்தியாக சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 வரை குறைந்துள்ளது அதாவது இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,4475க்கு விற்பனை ஆகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைக்கப்பட்டு ஒரு சவரனுக்கு ரூ.80 என குறைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைவால் ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.35,800 என நிர்னயமாகியுள்ளது. இன்றைய வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.75 க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை குறைவால் மக்கள் மற்றும் நகை பிரியர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here