அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – தங்கம் வாங்க நல்ல நேரம்!!!

0

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. தற்போது தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

தங்கம் வாங்க நல்ல நேரம்:

டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய அனைத்து முக்கிய நகரங்களிலும் தங்க விகிதம் இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3- குறைந்து ரூ.4612- க்கு விற்பனையாகிறது. நேற்று இதன் விலை ரூ.4615 ஆக இருந்தது.

தங்கம் பவுனுக்கு ரூ.24 குறைந்து ரூ.36896-க்கு விற்பனையாகிறது. தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் 4,971 ரூபாயாகக் குறைந்து, 8 கிராம் தூய தங்கம்   39,768 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.76.10 -க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.76,100 ஆக உள்ளது.

மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,814 என்றும், பெங்களூருவில் ரூ.4,585 என்றும், ஹைதராபாத்தில் ரூ.4,585 என்றும், கேரளாவில் ரூ.4,597 என்றும், டெல்லியில் ரூ.4,691 என்றும், கொல்கத்தாவில் ரூ.4,783 என்றும், ஒசூரில் ரூ.4,596 என்றும், பாண்டிச்சேரியில் ரூ.4,595 என்றும் விற்பனையாகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here