இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை – அதிரடி விலை உயர்வு!!

0
Gold
Gold

கடந்த வாரத்தில் எதிர்பார்க்காத அளவு சரிந்த தங்கத்தின் விலை, வர்த்தகத்தின் முதல் நாளான இன்று மீண்டும் உயரத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் சற்று கவலை அடைந்துள்ளனர். இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் மீண்டும் 38 ஆயிரம் ரூபாயை நெருங்கி உள்ளது.

இன்றைய நிலவரம்:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உற்பத்தி குறைந்ததால் உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத அளவு சரிந்தது. இதற்கிடையில் பங்குச்சந்தையிலும் கொரோனா தாக்கம் எதிரொலித்ததால் ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர் மதிப்புகள் குறையத் தொடங்கின. இதனால் உஷார் ஆன முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்தனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இந்த விளைவுகளால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை பலமடங்கு உயர்ந்தது. ஊரடங்கால் கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம் நடைபெறாத போதிலும், விலை ஏற்றதால் நகைக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரிந்தது. இதனால் நகைக்கடைகளுக்கு படையெடுத்த மக்களால் வியாபாரம் ஜோராக நடைபெற்றது.

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் – 26 பேர் அதிரடி கைது!!

இந்நிலையில் வர்த்தகத்தின் முதல் நாளான இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.37,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ரூபாய் உயர்ந்து உயர்ந்து ரூ.4,690 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மறுபுறம் வெள்ளியின் விலையில் பெரிதளவில் மாற்றம் ஏற்படவில்லை. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.65.40 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here