அச்சச்சோ.., தங்கம் ரேட் இவ்வளவு கூடிருச்சா.., 1 கிராம் வாங்குறது கூட கஷ்டம் போலையே!! அதிர்ச்சியில் மக்கள்!!

0
அச்சச்சோ.., தங்கம் ரேட் இவ்வளவு கூடிருச்சா.., 1 கிராம் வாங்குறது கூட கஷ்டம் போலையே!! அதிர்ச்சியில் மக்கள்!!
அச்சச்சோ.., தங்கம் ரேட் இவ்வளவு கூடிருச்சா.., 1 கிராம் வாங்குறது கூட கஷ்டம் போலையே!! அதிர்ச்சியில் மக்கள்!!

மத்திய அரசு, ஜூலை முதல் நாள் தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதை தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடி உயர்வு:

ஆபரண தங்கம் இந்திய மக்களின் கலாச்சாரத்தோடும், நமது வாழ்வின் அனைத்து சுப காரியங்கள் என அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தங்கத்தின் தேவையானது கொரோனா காலகட்டத்தில் சற்று குறைந்தாலும், மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. அதோடு மக்களும் தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பால், எவ்வளவு தான் விலை அதிகரித்தாலும், தங்கம் வாங்கும் அளவை குறைத்தார்களே தவிர, அதை வாங்காமல் நிறுத்தவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பொன்னியின் செல்வன் திரைப்படம் படைத்த மற்றுமொரு சாதனை.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

எனவே தங்கம் விலையானது அதிகரித்திருந்தாலும், குறைந்திருந்தாலும் மக்களால் தவிர்க்க முடியாத ஆபரணமாக தங்க நகைகள் விளங்குகிறது. அந்தளவுக்கு நகைப்பிரியர்களுக்கு தங்கத்தின் மீது மோகம் உண்டு.தங்கம் விலையானது கடந்த இரு வாரங்களாக தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ. 37,640க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.560 உயர்ந்து 38,200‬ ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதே போன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து 4,775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி தங்க விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது நகை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here