அதிரடியாக குறைந்த தங்க விலை – சந்தோச களிப்பில் மக்கள்!!

0
Beautifully crafted traditional Indian gold jewellery for women. The ornaments are known as bangles worn to hands and made up of 22 carat gold.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை தொடர்ச்சியாக மாறி மாறி இருந்து வருகின்றது. அந்த வகையில் இன்று மாலை நிலவரப்படி தங்க விலை குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் என்னும் பொக்கிஷம்:

வெளிநாடுகளில் வெறும் முதலீடு பொருளாக பார்க்கப்படும் தங்கம், இந்தியாவிலும், இந்திய மக்கள் மத்தியிலும் மிகவும் மதிப்பான பொருளாக பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் பணத்தை தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வதையே விரும்புவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியான நிலையில் தங்க விலை நிலவரம் நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகின்றது. இன்று காலை உயர்ந்து வந்த தங்க விலை மாலை நிலவரத்தில் குறைந்துள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் நிம்மதி அடைய வைத்துள்ளது.

தற்போதைய விலை நிலவரம்:

சென்னையில் ஆபரண தங்கம் (22 கேரட்) ஒரு சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து 37,696 என்று விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராம் தங்கம் 6 ரூபாய் குறைந்து 4,712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

‘மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என ரஜினி மன உளைச்சலில் உள்ளார்’ – அர்ஜுனன் மூர்த்தி பேட்டி!!

தூய தங்கம் (24 கேரட்) கிராம் ஒன்று 5,103 என்றும் ஒரு சவரன் 40,834 என்று விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து 72.20 என்றும் ஒரு கிலோ 72,200 என்றும் விற்பனை செய்யப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here