Saturday, April 20, 2024

தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் தங்க விலை – அதிர்ச்சியில் மக்கள்!!

Must Read

கடத்த 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்க விலை இன்றும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தங்க விலை ஏற்றம்:

தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குறிப்பாக, பெண்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியிலான ஆபரணங்களை அணிவது என்பது மிகவும் பிடித்தமான ஒன்றும் கூட. இப்படி பெண்களுக்கு அதிகமாக பிடித்ததாலோ என்னமோ..தங்க விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. இந்த கொரோனா கால பொது முடக்க காலத்தில் தங்க விலை ராக்கெட் வேகத்தில் இருந்து வந்தது. இதனால் பலரும் சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் தள்ளி போட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தங்க விலை ஒரு அளவு குறைந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், வழக்கம் போலவே தடாலடியாக உயர்ந்து வந்தது. இதனால் மக்கள் மிகவும் கவலை அடைந்தனர். குறைந்தாலும் கொஞ்ச கொஞ்சமாக தான் குறைந்தது. கடத்த இரெண்டு நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

இன்றைய தங்க விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் (22 கேரட்) ஒரு சவரன் 56 ரூபாய் உயர்ந்து ரூ.37,560 என்ற விலை நிலவரத்தில் உள்ளது. ஒரு கிராம் 7 ரூபாய் உயர்ந்து ரூ.4,695 என்று விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கம் (24 கேரட்) ஒரு கிராம் 7 ரூபாய் உயர்ந்து ரூ.5,079 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இலவச மின்சாரம் திட்டம் ரத்தாகுமா?? முதல்வர் பழனிசாமி பேட்டி!!

ஒரு சவரன் தங்கம் 56 ரூபாய் உயர்ந்து ரூ.40,632 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளியின் விலையும் நேற்றைய விலையை விட உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.60 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.70,600 என்று விற்பனை செய்யப்படுகிறது.

பிற இடங்களில் தங்க விலை:
  • மும்பை – 4,827 (ஒரு கிராம்)
  • பெங்களூர் – 4,621
  • ஹைராபாத் – 4,621
  • கேரளா – 4,622
  • டெல்லி – 4,816
  • கொல்கத்தா – 4,851
  • ஓசூர் – 4,676
  • பாண்டிச்சேரி – 4,672

இவ்வாறாக ஒவ்வொரு இடங்களிலும் தங்க விலை சிற்சில மாறுபாடுகளுடன் இருந்து வருகின்றது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு…, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

தென்னிந்திய சினிமாக்களில் மலையாள திரைப்படம் ஒரு தனி ரகம் தான். அந்த வகையில் தான் “மஞ்சுமெல் பாய்ஸ்” என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த பிப்ரவரி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -