அடிச்சது ஜாக்பாட்.. கணிசமாக குறைந்த தங்கத்தின் விலை – எவ்வளவு தெரியுமா?

0

கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று எட்டு கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து 34,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறைந்த தங்கத்தின் விலை:

அடுத்தடுத்து வந்த திருவிழாக்கள் மற்றும் முகூர்த்தங்கள் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை எந்தவித ஏற்ற, இறக்கம் இல்லாமல் காணப்பட்டது.  இது மட்டுமில்லாமல் இரண்டு தினங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை கிராமுக்கு 256 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.  இதனால், பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.  இது போக எப்போது இந்த விலையில் மாற்றம் வரும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.


இந்த நிலையில், நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை 176 ரூபாய் குறைந்து 35,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  இது மட்டுமல்லாமல், நேற்று 8 கிராம் ஆபரணத் தங்கம்  35,472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.  தற்போது, நேற்றைய இந்த விலை மதிப்பில் இன்று கணிசமான விலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்றைய தங்கத்தின் விலை வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


அதாவது, இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை கணிசமாக  குறைந்து ரூ.4,365 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  மேலும், நேற்று 35,472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 400 ரூபாய் குறைந்து 34,920 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.  இது மட்டுமல்லாமல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு 1.50  காசுகள் குறைந்து  ரூ.65.50 ஆக விற்பனையாகி வருகிறது.  இதோடு சேர்த்து, ஒரு கிலோ வெள்ளி 65,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here