நகை வாங்க இத விட நல்ல சான்ஸ் கிடையாது – அதிரடியாக குறைந்த தங்க விலை!!

0
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏறவும் இறங்குவுமாக உள்ளது. ஆனால் இன்று அதிரடியாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.35,592க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அடுத்தடுத்து ஓணம், தீபாவளி என பண்டிகைகள் வருவதால் தங்கம் வாங்க அதிகளவு மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் கொரோனாவால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கம் விலை குறைந்துள்ளது.
 
இத்தகைய சூழலில் தங்கம் விலை சரிந்திருப்பது மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தங்கம் விலையானது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது தற்போது 10 கிராமுக்கு 9000 சரிவில் காணப்படுகிறது.

இன்று, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,449க்கும் சவரன் ரூ.35,592க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு விலை ரூ.120 குறைந்துள்ளது.  ஒரு கிராம் வெள்ளி ரூ.67.40 க்கு விற்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here