சவரனுக்கு ரூ.352 அதிகரித்த தங்கத்தின் விலை – கவலையில் நகை பிரியர்கள்!!

0

இந்தியாவில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளது. சரவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்து 35,968 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. இதனால் நகை வாங்க விரும்பும் நகை பிரியர்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை நிலவரம்:

தங்க நகையை விரும்பாத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தங்கத்தின் மீதான ஆசையானது அனைவரின் மனதிலும் நிலைத்து நின்றுவருகிறது. மக்கள் தங்கநகையை வாங்குவதில் அதிக ஆர்வம் கட்டிவருகின்றனர். மக்களின் இந்த ஆர்வத்தால் நகையின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இருந்த போதும் இதனை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது.


தற்போது முகூர்த்த நாட்கள் வந்துவிட்டதால் திருமண மற்றும் மற்ற பிற சுபகாரியங்களுக்காக மக்கள் தங்க நகைகளை வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது  கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்து 4,496 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 
மேலும் சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து 35,968 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வரைக்கும் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் பெரிதாக இல்லாத போதிலும் இன்று சவரனுக்கு 352 ரூபாய்  அதிகரித்தது நகைவாங்க நினைக்கும் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. மேலும், வெள்ளி விலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.69.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,600க்கும் சென்னையில் விற்பனையாகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here