லாக்டவுனில் ஏற்ற, இறக்கத்தை சந்திக்கும் தங்கம் விலை: இன்று விலை சரிவு..!!

0

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,575-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று விலை சரிவு:

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. தங்க விலை இன்று 100 கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. 22 காரட் 10 கிராம் தங்க விகிதம் சுமார் 47,700 ரூபாயாக சரிந்தது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 48,700 ரூபாயாக குறைந்தது.

இந்தியா முழுவதும் தங்கத்தின் விலை குறைந்துவிட்டது, இதன் விளைவாக நகர வாரியாக தங்க விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன. அந்தந்த அரசாங்கங்கள் விதிக்கும் வரிகளின் காரணமாக தங்கத்தின் விலை நகர வாரியாகவும், மாநில வாரியாகவும் மாறுபடும். மும்பையில் தங்கத்தின் விலை 22 காரட் 10 கிராமுக்கு ரூ.47,720 ஆகவும், 24 கிராமில் 10 கிராமுக்கு ரூ.48,720 ஆகவும் உள்ளது. டெல்லியில் தங்கத்தின் விலை 22 காரட் 10 கிராமுக்கு ரூ.47,880 ஆகவும், 24 கிராமில் 10 கிராமுக்கு ரூ .52,180 ஆகவும் உள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 240 ரூபாய் குறைந்து ரூ.4,575 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 8 கிராம் ஆபரணத் தங்கம்  36,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.77.30 ஆக இருந்தது. இன்று அது ரூ.76.50 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 76,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here