நாளுக்கு நாள் அதிர்ச்சி கொடுக்கும் தங்கத்தின் விலை – சவரனுக்கு ரூ.64 உயர்ந்தது!!!

0

தங்கம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.37,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

சவரனுக்கு ரூ.64 உயர்ந்தது:

தங்கம் விலையானது வாரத்தின் முதல்  நாளான திங்கம் முதல் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகின்றது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,655 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,647 ரூபாயாக இருந்தது, தற்போது பவுனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37240 -க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை 1 ரூபாய் உயர்ந்து ரூ.77.50க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.77,500 ஆக உள்ளது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.40112-க்கு விற்பனையாகிறது.

சென்னை தவிர பிற மாநிலங்களில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,824 என்றும், பெங்களூருவில் ரூ.4,615 என்றும், ஹைதராபாத்தில் ரூ.4,615 என்றும், கேரளாவில் ரூ.4,616 என்றும், டெல்லியில் ரூ.4,698 என்றும், கொல்கத்தாவில் ரூ.4,701 என்றும், ஒசூரில் ரூ.4,615 என்றும், பாண்டிச்சேரியில் ரூ.4,616 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here