தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.,, நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

0

தமிழகத்தில் தான் மற்ற மாநிலங்களை விட அதிகமான நகைப்பிரியர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து உள்ளது.

தங்க விலை குறைவு:

கடந்த சில தினங்களாகவே ஆபரண தங்கத்தின் விலை சரிவை எட்டி வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் அதிக மகிழ்ச்சி நிலவி வருகிறது. மேலும் ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்க உள்ளது. புரட்டாசி மாதத்தில் பெருபாலும் திருமணங்கள் அதிக அளவில் நடைப்பெறாது என்பதால், தங்கம் வாங்குவது மேலும் குறையும். இந்நிலையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக குறைந்து விற்பனையான தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக குறைந்து உள்ளது.

இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து, ரூ.4,701-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து, ரூ.37,608-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,870-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 19 ரூபாய் குறைந்து, ரூ.3,851-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து, ரூ.61,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.51.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here